Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் - மழை பாதிப்பு இடங்களில் நிவாரண முகாம்கள் : பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய அறிவுறுத்தல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அருகில், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர். அடுத்த படம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர்/திருப்பத்தூர்

வேலூர், திருப்பத்தூர் மாவட் டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறி யப்பட்டுள்ள இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடை பெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் ஸ்வர்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசும்போது, "வேலூர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்புகளை தடுக்க அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாவட் டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகாமல் இருக்க முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக 23 இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதியில் 27 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், முகாம்களில் தங்க வைக்கக்கூடிய பொது மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும். நிவாரண முகாம்களில் கரோனா விதிமுறைகளை கட்டாயம் பின் பற்ற வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, திட்ட இயக் குநர் ஆர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும். மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு உள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பேரிடர் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து பொதுமக்களிடம் இருந்து வரும் கோரிக்கை மனுக் கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும்.

தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்புத்துறை மீட்புப்படையினர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 208 கிராம ஊராட்சி களிலும் ஊராட்சி மன்ற தலைவர் பேரிடர் காலத்தில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மழை யினால் சாலையோரங்களில் முறிந்து விழும் மரங்களை ஒரு மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.

பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழையினால் மாவட்டம் முழுவதும் 24 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. பொம்மிக்குப்பம் ஏரி, சிம்மனபுதூர் ஏரி, மாடப்பள்ளி ஏரி, ஜடையனூர் ஏரி, பெருமாம்பட்டு ஏரி, குரும்பேரி ஏரி, சின்ன சமுத்திரம் ஏரி, வெள் ளேரி, செலந்தம்பள்ளி ஏரி, கனமந்தூர் ஏரி, கோனேரிகுப்பம் ஏரி, பள்ளிப்பட்டு ஏரி, உதயேந்திரம் ஏரி, துளசிப்பை ஏரி, விண்ணமங்கலம் ஏரி, பெரியான் குப்பம் ஏரி, சாண்றோர்குப்பம் ஏரி என மொத்தம் 17 ஏரிகள் நிரம்பி யுள்ளன.

எனவே, இந்த 17 ஏரிகளுக்கு அருகே வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கரோனா தடுப்பூசி செலுத்த ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்குகளை அடைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில், எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், திட்ட இயக்குநர் செல்வராசு, தனித் துணை ஆட்சியர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட வழங்கல் அலு வலர் விஜயன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) பானு, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x