Published : 26 Oct 2021 03:08 AM
Last Updated : 26 Oct 2021 03:08 AM
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பொதுமக்கள் அளித்த பல்வேறு மனுக்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டியை சேர்ந்த ரேவதி (35) என்பவர் அவரது 2 பெண் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை, அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
அவர் அளித்த மனுவில், ‘கணவர் தரணி என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தபோது உயிரிழந்து விட்டார். அவரது பி.எப் பணத்தை போலி வாரிசு சான்றிதழ் காட்டி வாங்கிக் கொண் டனர். இதனால் நான் எனது குழந் தைகளுடன் தவித்து வருகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
வேலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் பல சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. வாகனங்களை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. மூத்த வழக்கறிஞர் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது பாதாள திட்டப் பணிக்காக வந்த டிராக்டர் பள்ளத்தில் சரிந்து சிக்கிக் கொண்டது. அப்போது, அந்த வழக்கறிஞர் காலும் சிக்கிக் கொண்டது. தற்போது அவரது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய வாகனத்துக்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT