Published : 25 Oct 2021 03:11 AM
Last Updated : 25 Oct 2021 03:11 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை : ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் எம்.பி., அண்ணாதுரை தலைமையில் நேற்று நடைபெற்றது. அருகில், ஆட்சியர் முருகேஷ், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பி., விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை என ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் குற்றஞ் சாட்டியுள்ளார்.

திருவண்ணணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும், குழுத் தலைவருமான அண்ணாதுரை தலைமை வகித்தார். ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார்.

இதில், செங்கம் எம்எல்ஏ கிரி பேசும் போது, “அக்கரைப்பட்டி – மேல் வலசை இடையே ரூ.8 கோடி மதிப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணி நிலுவையில் உள்ளது. வீடு வழங்கும் திட்டத்தில் முறையாக பயனாளிகள் தேர்வு நடைபெறவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் செய லாளர்களின் தலையீடு உள்ளது. எனவே, ஊராட்சி செயலாளர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும். தாட்கோ மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை தொடரக் கூடாது” என்றார்.

ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் பேசும்போது, “எனக்கு வழங் கப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்த புத்தகத்தில், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போளூர் சட்டப்பேரவைத் தொகுதியின் விவரம் இடம்பெறவில்லை. ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போளூர் தொகுதி நீக்கப் பட்டுவிட்டதா? என்ற உள்ளது. சாலை திட்ட பணியிலும் முழுமையான தகவல் இல்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்தப் பணியும் முழுமையாக நடைபெறவில்லை. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை மற்றும் மயானம் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதில், 33 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை நடைபெறுகிறது. இதனை மனதில் வைத்து பணியாற்றுங்கள்’’ என்றார்.

கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் பேசும்போது, “ஜல்ஜீவன் திட்டத்துக்காக குடிநீர் குழாய் புதைக்க தோண்டப்பட்ட பள் ளத்தால் சாலையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய வேண்டும். பழுதடைந்துள்ள சத்துணவு மைய கட்டிடம், நியாய விலை கடை கட்டிடம் மற்றும் பள்ளிக் கூட கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும்’’ என்றார்.

ஜவ்வாதுமலையில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கிடங்கை பயன்படுத்தி, மலை கிராமங்களில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொருட்களை விநியோகிக்க வேண்டும்” என்றார்.

தி.மலை எம்.பி., அண்ணாதுரை பேசும்போது, “முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில்லை. கடைக் கோடி மக்கள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். அதனை மனதில் கொண்டு அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும்’’ என்றார்.

துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசும்போது, “அனைத்து கிராமங் களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டிக் கொடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை முதன்மை மாவட்ட மாக மாற்ற வேண்டும்” என்றார்.

இறுதியாக ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டிய குறைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள பயனாளி களை சென்றடைய வேண்டும். மழைக் காலம் என்பதால், பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்துவிட வேண்டும்” என்றார்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்பேத் குமார், ஜோதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x