Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM
சிறப்பு ரயில்களின் கால அட்டவ ணை நவம்பர் முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சில சிறப்பு ரயில்களின் கால அட்டவணை நவம்பர் முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
மதுரை - ராமேசுவரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06655) நவம்பர் 4-ம் தேதி முதல் மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே இரவு 7.30, 7.42, 7.55, 8.10, 8.25, 8.47, 9.02, 9.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7.15, 7.25, 7.40, 7.56, 8.10, 8.32, 8.52, 9.10 மணிக்கு புறப்படும்.
புனலூர் - மதுரை சிறப்பு ரயில் (வண்டி எண் 06730) நவம்பர் 1 முதல் விருதுநகரிலிருந்து அதிகாலை 3.15 மணிக்கு பதிலாக அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.
சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06101) நவம்பர் 1 முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.40-க்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 11.05-க்கு புறப்படும். மறுமார்க்கத்தில் (வண்டி எண் 06102) திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 8.05 மணிக்கு புறப்படும்.
புவனேஸ்வர் - ராமேசுவரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 08496) நவம்பர் 4 முதல் திருச்சி, புதுக்கோட்டை, காரைக் குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 4.25, 5.15, 6.30, 6.38, இரவு 7.05, 7.45, 8.10, 8.35 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக மாலை 4.15, 5.05, 5.55, 6.04, 6.35, இரவு 7, 7.25, 7.55 மணிக்கு புறப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT