Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM

மதுரை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி :

மதுரை

மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள செவிலியர் பயிற்சிக் கல்லூரி என்சிசி மாணவர்கள் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இப் பணியை டீன் ரெத்தினவேலு தொடங்கிவைத்தார்.

மருத்துவமனை வளாகம், வார்டுகளில் தேங்கி இருந்த குப்பைகளை அப்புறப் படுத்தினர். நோயாளிகள், பார்வையாளர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும், குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் குப்பைத் தொட்டிகளில் போடு மாறும் விழிப்புணர்வு செய்தனர்.

செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் ராஜாமணி, ஒருங்கிணைப்பாளர் என்சிசி அதிகாரி செல்வராஜன் ஆகி யோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x