Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர்கள் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 12-வது வார்டு திமுக உறுப்பினர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவிடம் மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து ஜெகதீஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் ஜெகதீஷ் பதவி யேற்றுக்கொண்டார். அவருக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை எம்எல்ஏவுமான அப்துல்வகாப் வாழ்த்து தெரிவித்தார். வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறும்போது, ‘‘மாவட்ட ஊராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேவையான திட்டங்களை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக பணியாற்றுவோம்’’ என்று தெரிவித்தார். பிற்பகலில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் போட்டியின்றி செல்வலெட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.
உள்ளாட்சி உறுப்பினர்களாக திமுகவினரே பெரும்பாலும் வெற்றி பெற்றிருந்ததால் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் களாக அக் கட்சியினரே தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத்திலுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவர்கள், துணைத் தலைவர்களாக தேர்ந் தெடுக்கப்பட்டு பதவியேற் றவர்கள் விவரம்:
ஒன்றிய தலைவர்கள்
அம்பாசமுத்திரம் - சிவனு பாண்டியன், சேரன்மகாதேவி - பூங்கோதை சீவலமுத்து, களக்காடு- ஜா.இந்திரா, மானூர்- லேகா, நாங்குநேரி - சவுமியா ராகா, பாளையங்கோட்டை-கே.எஸ்.தங்கபாண்டியன், பாப்பாக் குடி- பூங்கோதை, ராதாபுரம் - ஜெ.சவுமியா, வள்ளியூர் - ஞா. சேவியர் செல்வராஜா.
ஒன்றிய துணைத் தலைவர்கள்
இதுபோல் மாவட்டத்தில் 204 ஊராட்சிகளிலும் துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT