Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் ‘தீபாவளி 2021’ சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் கூறியது:
தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான ‘கோ-ஆப் டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி ரகங்களை அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது.
காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.
தற்போது தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டுபுடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூரைப் புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண் ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.75 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களின் மாதந்தோரும் ரூ.300 முதல் ரூ.5 ஆயிரம் வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12 வது மாத இரண்டு தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே இலவசமாக செலுத்துவதால், கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.
தீபாவளி சிறப்புத் தள்ளுபடியாக 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் வசதியும் உண்டு.
அனைத்து துறை ஊழியர் களும், பொதுமக்களும் கைத்தறி துணி ரகங்களை வாங்கி பயன்பெறுவதோடு, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு மேம்பட உதவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT