Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM

ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அஞ்சலி : மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்

பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேற்று மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். அடுத்த படங்கள்: ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன். திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன். கடைசிப் படம்: திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/ தி.மலை

ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் தி.மலை மாவட்டத்தில் காவலர் வீர வணக்க நாளையொட்டி காவல் கண்காணிப்பாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத் தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ தினமாக அனு சரிக்கப்படுகிறது.

அதன்படி, வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் உள்ள நினைவு சின்னத்தில் ‘காவலர் வீர வணக்க நாள்’ தினம் நேற்று அனுசரிக்கப் பட்டது. இதில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், வேலூர் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணி மாறன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினர். அப்போது, காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் புகழேந்தி கணேஷ் (அரக்கோணம்), பிரபு (ராணிப்பேட்டை) உள்ளிட்டோர் நினைவுத் தூணுக்கு மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள ஆயுதப்படை காவலர் மைதானத்தில் ‘காவலர்கள் வீர வணக்க நாள்’ நேற்று அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி., சுப்புராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் சாந்த லிங்கம்(திருப்பத்தூர்), சுரேஷ் பாண்டியன் (வாணியம்பாடி), சரவணன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 68 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர்வீரவணக்க நாள் கடைபிடிக் கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பவன்குமார், மலர் வளையம் வைத்து உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். மேலும், 120 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து உடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜகாளிஷ்வரன், மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.வெள்ளைத் துரை, தி.மலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் டி.குமார், மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் எம்.சீனிவாசன் உட்பட பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x