Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM
மதுரை மாவட்ட காவல்துறையில் இயங்கிவரும் வாகனங்களின் உறுதித்தன்மை குறித்து, காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டக் காவல் துறைக்குத் தேவையான வாகனங்கள் ஆயுதப்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா மற்றும் செயல்படும் விதம் குறித்து காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
அப்போது, வாகன ஓட்டுநர்க ளின் குறைகளை அவர் கேட் டறிந்தார்.
மேலும், கட்டாயம் சீட் பெல்ட், தலைக்கவசம் அணிய வேண்டும். விபத்து ஏற்படாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் வாகனங்களை சிறப் பாக பராமரித்த காவலர்களைப் பாராட்டினார்.
ஆய்வின்போது, ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன், வாகனப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT