Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM
காவல் நிலையங்களில் புகார் களைப் பெற சிறப்பு காவல் அதிகாரியை நியமிக்கக் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த சுரேஷ்குமார் ஐசக்பால், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
காவல் நிலையத்துக்கு தினமும் பல்வேறு புகார்கள் வருகின்றன. காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் புகார்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதம் காரணமாக சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, குற்றம் செய்தவர்கள் தப்பிக்கும் சூழல் ஏற்படுகிறது.
புகார் கொடுக்க வருபவர்கள் நீண்ட நேரம் காவல் நிலையத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆன்லைனில் புகார் பதிவு செய்தாலும் அதற்கான ரசீது வாங்க காவல் நிலையத்துக்கு நேரில் வர வேண்டியுள்ளது. எனவே, தமிழகத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகாரை பெற சிறப்பு காவல் அதிகாரியை நியமிக்கவும், புகார் ரசீதை உடனடியாக வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT