Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM

காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் காரில் தீ :

மதுரை

மதுரை அருகே பெருங்குடி சவுராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் சைமன். காங்கிரஸ் மனித உரிமைப்பிரிவு நிர்வாகி. தனது வீட்டு முன் நிறுத்தி இருந்த இவரது காரிலிருந்து புகை வெளியேறியது. கார் திடீரென தானாக நகர்ந்து அருகிலுள்ள முட்புதருக்குள் புகுந்து நின்றது. மேலும் காரை திறக்க முயன்றபோது, கார் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீயை அணைக்க முடியாத நிலையில், கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அவனியாபுரம் காவல்நிலையத்தில் சைமன் அளித்த புகாரின்பேரில் தீ விபத் துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x