Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM
சிவகங்கை மாவட்ட ஊராட்சி களில் ரூர்பன் திட்டத்தில் மக ளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆட்டோக்களை அந்தந்த ஊராட்சிகளின் ஊராட்சித் தலைவர்களே பினாமி பெயரில் இயக்குவதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடி, காஞ்சிரங்கால், சோழபுரம், கொட்டகுடி-கீழ் பாத்தி, சக்கத்தி, அரசனி முத்துப் பட்டி, இடையமேலூர் ஆகிய 7 ஊராட்சிகள் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தில் நகர்மய மாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மகளிர் மேம் பாட்டுக்காக 7 ஊராட்சிகளில் உள்ள மகளிர் குழுக்களுக்கு 7 ஷேர் ஆட்டோக்களும், தலா 2 நடமாடும் உணவகம், நட மாடும் விற்பனையக வாகனங்கள் வழங்கப்பட்டன. இவற்றை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
ஆனால், சில ஊராட்சிகளில் இந்த வாகனங்களை மகளிர் குழுக் களுக்கு வழங்காமல் ஊராட்சித் தலைவர்களே தங்கள் பினாமிகள் மூலம் இயக்கி வருகின்றனர்.
மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் அவர் களே வைத்துக் கொள்வதால் மகளிர் குழுவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் வானதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: 3 ஊராட்சிகளில் இப்பிரச்சினை இருந்தது.
இதையடுத்து ஊராட்சித் தலைவர்களிடம் இருந்து வாக னங்களைப் பெற்று மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்தோம். மீண்டும் சில ஊராட்சிகளில் இதேபோல வந்துள்ள புகார்கள் குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT