Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM

விதிமுறைகளை மீறி செயல்படும் - கப்பலூர் டோல்கேட்டை அகற்ற சட்டரீதியாக நடவடிக்கை : மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் உறுதி

மதுரை

கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந் தரமாக அகற்ற சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அது வரையில் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாகனங்களுக்கு கட் டணம் வசூலிக்கக் கூடாது என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் உத்தர விட்டுள்ளார்.

திருமங்கலம் அருகே கப்ப லூரில் 4 வழிச்சாலையில் 2012-ம் ஆண்டு முதல் சுங்கச் சாவடி செயல்படுகிறது. நகராட்சி யிலிருந்து 5 கிமீ தொலைவுக்குள் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது. சர்வீஸ் சாலை அமைக்காமல் சுங் கச்சாவடி இயங்கக்கூடாது என 2 விதிகளை மீறி இங்கு சுங்கச்சாவடி செயல்படுகிறது. 9 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி வியாபாரிகள், வாகன உரிமை யாளர்கள், சிட்கோ தொழிற்பேட்டை உரிமையாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நடந்த விவாதம் தொடர்பாக திருமங்கலம் திமுக முன்னாள் நகர் செயலாளர் தர் உட்பட பலரும் கூறியது: உச்ச நீதிமன்றத்தில் தவறான உறுதிமொழியை அளித்துத்தான் சுங்கச்சாவடி செயல்பட அனுமதி பெறப்பட்டுள்ளது. கட்டண வசூலில் நீதிமன்றத்தை ஏமாற்றி வருவது, இதை எதிர்த்து அரசு தரப்பில் முறையீடு செய்யாதது தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுவரை நடந்துள்ள போராட்டங்கள், வழக் குகள், மக்கள் பாதிப்பு குறித்து பலரும் பேசினர்.

உயர் நீதிமன்றம் சுங்கச் சாவடிக்கு எதிராகவே தீர்ப் பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. ராஜபாளையம் சாலைக்கு செல் வோருக்கு கட்டணம் வாங்கு வதில்லை என்றும், ஒத்தை ஆலங்குளம் வழியாக மாற்று சாலை உள்ளதாகவும் தவறான உறுதிமொழியை அளித்தது. இதை ஏற்று சுங்கச்சாவடியை அதே இடத்தில் செயல்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை ஆதாரப்பூர்வமாக சுட் டிக்காட்டியும் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய் யப்படவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் மட்டுமின்றி ராஜ பாளையம், பேரையூர், கல் லுப்பட்டி மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கிறது. உள்ளூர் வாகனங்கள் சிலவற்றுக்கு விதிவி லக்கு அளித்தாலும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப் பட்டது.

ஒத்தை ஆலங்குளம் சாலை 4 வழிச் சாலைக்கு எந்த வழியிலும் மாற்றுச் சாலையாகிவிடாது என ஆதாரத்துடன் புகார் அளிக்கப் பட்டது.

மதுரை ஆட்சியர்களாக இருந்த எல்.சுப்பிரமணியன், அன்சுல் மிஸ்ரா, டி.ஜி.வினய் என பலரும் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு எதி ராக உத்தரவுகளை பிறப்பித்து, அதை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரையில் திருமங்கலம் தொகுதி வாகனங் களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப் படவில்லை. ஆட்சியர்களின் உத் தரவை சுங்கச்சாவடி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை.

இந்நிலையில் கடந்த சட் டப்பேரவை தேர்தல் பிரச்சாரத் தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சுங்கச் சாவடியிலேயே மறித்து மனு அளிக்கப்பட்டது. மேலும் ஒத்தக் கடையில் நடந்த பொதுக்கூட் டத்திலும் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையாக இக்கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்ததும் கப்பலூர் சுங்கச் சாவடி அகற்றப்படும் என உறுதி அளித்தார். கப்பலூர் சுங்கச் சாவடி உடனே அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றனர்.

அமைச்சர் பி.மூர்த்தி பேசுகை யில், மக்களுக்கு பயனளிக் காத இந்த சுங்கச்சாவடி அகற் றப்பட வேண்டும் என்றார். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் பேசுகையில், மக்களின் நியா யமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். கப்பலூர் சுங்கச்சாவடியை சட்டரீதியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை திருமங்கலம் பகுதி மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்றார். இதையடுத்து விரைவில் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என இப்பகுதியினர் நம்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x