Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM

ஹோட்டலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு :

மதுரை

மதுரை காமராசர்புரத்தைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன் (23), வசந்தகுமார் (25), சதீஸ்குமார் (25), செல்வகுமார் ( 23). இவர்கள் முனிச்சாலை பழைய குயவர்பாளையத்திலுள்ள ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவில் சாப்பிட வந்தனர். அப்போது அவர்கள் மது குடிக்க முயன்றனர்.

அங்கு பணிபுரிந்த முனீஸ்வரன் இதை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் முனீஸ்வரனை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x