Published : 21 Oct 2021 03:08 AM
Last Updated : 21 Oct 2021 03:08 AM

வேலூர் தீபம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் - தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம் :

வேலூர் சாரதி மாளிகையில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார். அருகில், எம்எல்ஏ கார்த்திகேயன் உள்ளிட்டோர்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத் தில் நடப்பு ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உக்திகளை கையாண்டு அரிய வேலைப் பாடுகளுடன் வண்ண கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி ரகம் சேலைகள் புதிய வடிவ மைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

வேலூர் தீபம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலை யத்தில் இந்த ஆண்டு ரூ.4 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை அக்டோபர் 3-ம் தேதி முதல் அனைத்து கோ - ஆப்டெக்ஸ் விற்பனையகங்களிலும் 30 சத வீதம் சிறப்பு தள்ளுபடியுடன் வழங்கப்படும். திருமண பட்டுப் புடவைகள் ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸில் பெற்று பயன்பெற வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், வேலூர் மண்டல முதுநிலை மேலாளர் இசக்கிமுத்து, வடிவமைப்பு உற்பத்தி பிரிவு மண்டல மேலாளர் நந்தகோபால், தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x