ஊரணியில் துணி துவைத்த பெண்ணிடம்  -  கத்தியை காட்டி 5 பவுன் சங்கிலி பறிப்பு  :

ஊரணியில் துணி துவைத்த பெண்ணிடம் - கத்தியை காட்டி 5 பவுன் சங்கிலி பறிப்பு :

Published on

கீழக்கரை அருகே எம்.மோர்குளத்தைச் சேர்ந்த இம்ரான் மனைவி ஆயிஷத்துல் இமான்(29). இவர் நேற்று முன்தினம் காலை தனது அக்காள் மகள் மும்முல் ஆஷிபாவுடன் எம்.மோர்குளம் ஊரணியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது இளைஞர் ஒருவர் மும்முல் ஆஷிபா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சங்கிலியைப் பறிக்க முயன்றார். அவர் இளைஞரின் கையைத் தள்ளிவிட்டு தப்பினார்.

அதையடுத்து ஆயிஷத்துல் இமான் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார்.

இது குறித்து கீழக்கரை போலீஸார் விசாரணை செய்து, சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம்(30) என்பவரை கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in