Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM
தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவ நெல் சாகுபடி பணி கள் தீவிரமடைந்து வருகின்றன. நெற்பயிர்களில் எதிர்பாராத இயற்கை சீற்றங் களால் மகசூல் குறைவோ, இழப்போ ஏற்படும்போது திருத்தியமைக் கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகள் உரிய இழப்பீடு பெற வழிவகை உள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் பிசான பருவத்துக்கு அக்ரிகல்சரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு ஏக்கர் ஒன்றுக்கு விவசாயிகள் பிரீமியமாக ரூ.466 செலுத்த வேண்டும். பிரீமியத் தொகையை பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கங்களிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களிலோ செலுத்தலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்மொழிவு படிவம், பதிவுப் படிவம், கிராம நிர்வாக அலுவலர் உரிய படிவத்தில் வழங்கும் அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவை அவசியமாகும்.
விதைப்பதற்கு முன்பு காப்பீடு பதிவு செய்யவும், தடுக்கப்பட்ட விதைப்பு வகையில் பலன் பெறவும் மட்டும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் விதைப்புச் சான்று அவசியமாகும்.
விருப்பமுள்ள விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று சரியான புல எண்ணுக்கு சரியான பரப்புக்கு மட்டும் பிரீமியம் செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்திய ரசீது பெற்றவுடன் அதில் உள்ள விவரங்கள் சரிதானா என பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நடப்பு பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்களை காப்பீடு செய்ய தென்காசி மாவட்டத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங் களையோ, வேளாண்மைத்துறை அலுவலர்களையோ அணுகலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT