Published : 19 Oct 2021 03:08 AM
Last Updated : 19 Oct 2021 03:08 AM
மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ம் தேதி அவரது கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 27 மொபைல் போன்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து வளர்மதி அளித்த புகாரில் தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் கார்த்தி. பூட்டியிருந்த இவரது வீட்டுக்குள் கடந்த 17-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மொபைல்போன் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்றனர். தனிப்படை போலீஸார் விசாரணையில் நரிமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி, ராஜ்குமார், செல்லூர் பிரேம்குமார் ஆகி யோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
இந்நிலையில் நேற்று சுந்தரபாண்டி, ராஜ்குமாரை கைது செய்தனர். தலைமறை வான பிரேம்குமாரை தேடி வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT