Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் - இயந்திரங்கள் பழுதால் காத்திருக்கும் கரும்பு வாகனங்கள் : எடை குறையும் என விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கடந்த ஒருவாரமாக காத்திருக்கும் கரும்பு கட்டுகளை ஏற்றி வந்த டிராக்டர்கள்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக கொண்டுவரப்பட்ட கரும்புகள் ஒரு வார மாக வாகனத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை எடை குறைந்து வருவாய் குறையும் என விவசாயிகள் கவலை தெரி விக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங் கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-1 உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த ஆலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அரவை பணி தொடங்கிய போதும், கடந்தஒரு வாரமாக ஆலை இயங்க வில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆலையில் சுமார் 8 ஆயிரம்டன்னுக்கு மேற்பட்ட கரும்புகள் தேக்கமடைந்துள்ளன. கரும்புகட்டுகளை ஏற்றி வந்த டிராக்டர் களும் ஆலை வளாகத்தில் ஒருவாரத்துக்கு மேலாக காத்து நிற் பதால் கரும்பின் எடையும் குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாயிகள் மற்றும் டிராக்டர் ஓட்டுநர்களும் ஆலைக்கு தினமும் வந்து செல்வதால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் டிராக்டரில் உள்ள கரும்புகளை இறக்காதது குறித்து ஆலை அதிகாரிகளிடம் விவசாயிகளும், டிராக்டர் ஓட்டுநர்களும் கேட்டதற்கு, எடைஇயந்திரம் பழுதாகி இருப்பதாக வும் அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அதி காரிகள் தெரி வித்துள்ளனர்.

ஆனால், ஆலை எப்போது இயங்கும் என்று சரிவர கூறவில்லையாம். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகளும், ஓட்டுநர்களும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கூடிய விரைவில் பழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து மீண்டும் ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகளும், ஓட்டுநர்களும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x