Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM
அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு கட்சியின் மூத்த தொண் டர்களை கவுரவிக்கும் வகையில் பொற்கிழி வழங்கப்பட்டது.
அதிமுக பொன்விழாவை யொட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் டி.குண்ணத்தூரில் எம்.ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அதிமுகவின் ஆரம்பகால உறுப்பினர்களுக்கு பொற்கிழி களை வழங்கி அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:
இந்த பொன்விழா ஆண்டை ஓராண்டு காலம் நாம் கொண் டாடும் வகையில் கட்டுரை, கவிதை, விளையாட்டுப் போட்டி களை நடத்த வேண்டும். மேலும் நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
நாம் ஒருமுறை தோல்வி அடைந்தால் தொடர்ந்து பல வெற்றிகளை அடைவோம். அதிமுக தொண்டர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அய்யப்பன் எம்எல்ஏ, ஜெயலலிதா பேரவைச் செயலர் கள் வெற்றிவேல், தன்ராஜன், பொருளாளர் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரை மாநகர் மாவட்டம் சார்பில், பனகல் சாலையிலுள்ள கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துக்கு மாநகர் மாவட்ட துணைச் செயலர் ராஜா தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது.
கே.கே. நகரிலுள்ள இருவரின் சிலைக்கும் எம்ஜிஆர் மன்ற மாநில செயலர் எம்.எஸ். பாண்டியன், இலக்கிய அணி இணைச் செய லர் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை உட்பட முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா பேரவை செயலர் எஸ்எஸ். சரவணன் தலைமையில் நடந்த விழாவில் தையல் இயந்திரம், டிரை சைக்கிள் உள் ளிட்டவை வழங்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் விவி. ராஜன்செல்லப்பா எம்எல்ஏ கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT