Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டி காந்திஜி தெருவைச் சேர்ந்த ராமன் மகள் ஆண்டிச்சி என்ற சுபதர்ஷினி(14). இவர் செட்டியார்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மகள் சபிதா(13). இவர் மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தார்.
இருவரும் அருகே உள்ள சிறுவாலை கண்மாய்க்கு நேற்று குளிக்கச் சென்றனர். வீடு திரும் பாததால் அவர்களது பெற்றோர் சிறுமிகளை தேடினர். கண்மாய் நீரில் மூழ்கி தத்தளிப்பதைக் கண்டனர். அவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரு வரும் இறந்து விட்டதாகத் தெரி வித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT