பெரியநரிக்கோட்டையில் மரத்தில் மோதியதில் பலத்த சேதம் அடைந்த சரக்கு வாகனம்.
பெரியநரிக்கோட்டையில் மரத்தில் மோதியதில் பலத்த சேதம் அடைந்த சரக்கு வாகனம்.

காளையார்கோவில் அருகே - சரக்கு வாகனம் மரத்தில் மோதி ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழப்பு :

Published on

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பில்லூரைச் சேர்ந்தவர் சின்னஅழகுமலை(60). இவர் நாகப்பட்டினத்தில் ஈச்சமர மட்டைகளை வாங்கிக் கொண்டு நேற்று காலை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

வாகனத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழையம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(35) ஓட்டினார். ஈச்சமர மட்டைகளை ஏற்றுவதற்காக திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன், அலெக்சாண்டர், செல்வம் ஆகியோரும் உடன் சென்றனர்.

காளையார்கோவில் அருகே பெரியநரிக்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே சின்ன அழகுமலை, ஓட்டுநர் மணிகண்டன் உயிரிழந்தனர். அலெக்சாண்டர், செல்வம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கண்ணனுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in