Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM

அகத்தீஸ்வரர் கோயிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி :

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம் அருகே விளந்தை அகத் தீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்புபோடு தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை கிராமத்தில் தர்மசம் வர்த்தினி சமேத மேலஅகத்தீஸ் வரர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி உற்சவருக்கு தினமும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நவராத்திரியின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு பண்டா சுரன் என்ற அரக்கனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அம்பாள் எழுந்தரு ளினார். எதிரில் பண்டாசுரன் வடிவில் ஒரு வாழை மரம் கட்டப்பட்டிருந்தது. அம்பாள் 3-வது முறை விட்ட அம்பில் பண் டாசுரனை வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அம்பாளுக்கு வெண்பட்டு சாத்தி, கல்கண்டு, பால், நைவேத்தியம் செய்யப்பட்டது.

அதேபோல, தா.பழூரில் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோயிலில் நவராத் திரி வழிபாட்டையொட்டி நேற்று முன்தினம் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வழக்கமாக மற்ற கோயில் களில் அம்மன் துர்க்கை கோலத்தில் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த கோயிலில் முருகப்பெருமான் கையில் வில் அம்புடன் வில்லேந்தி வேலவராக சம்ஹார மூர்த்தியாக காட்சி அளித்து, அசுரவதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை, பஞ்ச ஆரத்தி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x