Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM

லால்குடியில் அறநிலையத் துறை சார்பில் தொடங்கப்படும் - கலை அறிவியல் கல்லூரியை தற்காலிகமாக டால்மியா பள்ளி வளாகத்தில் தொடங்க திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு

திருச்சி

திருச்சி மாவட்டம் லால்குடியில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் தொடங்கப்படவுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியை தற்காலிகமாக டால்மியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்குவது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் முதுவத்தூரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, இந்த இடத்தில் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டப்படும் வரை, தற்காலிகமாக கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்லூரி தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை மேற் கொண்டார். பின்னர், டால்மியா மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, லால்குடி எம்எல்ஏ அ.சவுந்தரபாண்டியன், கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x