Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM
புதுக்கோட்டை தொழில் முதலீட் டுக் கழக கிளை நிரந்தரமாக மூடப் பட்டது. இதற்கு தொழில் முனை வோர் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
புதுக்கோட்டையில் 1980-ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. இக்கழ கத்தின் நிதி ஆதாரத்தில் மாவட்டத் தில் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 1,500 தொழில் நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டதுடன், ஆயிரக் கணக் கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வந்தனர்.
அண்டை மாவட்ட கிளைகளை விட புதுக்கோட்டை கிளையானது சிறப்புடனே செயல்பட்டு வந்த நிலையில், இக்கிளையானது கடந்த ஆண்டில் இருந்து சிறிய அளவிலான கள அலுவலகமாக தரம் குறைக்கப்பட்டது. பின்னர், விராலிமலை, குளத்தூர் பகுதிகள் திருச்சி கிளையுடனும், மற்ற பகுதிகள் காரைக்குடி அலுவலகத் துடனும் இணைக்கப்பட்டன. இந்நிலையில், புதுக்கோட்டை கிளை கடந்த 2 வாரங்களாக நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உந்து சக்தியாக விளங்கும் நிதி ஆதார நிறுவனங்களை மூடுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை கூறியது: தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. 90 சதவீத வேலைவாய்ப்புகள் இதுபோன்ற சிறு, குறு தொழில்களால்தான் அளிக்க முடியும். புதிய தொழில் முனைவோருக்கு நேரடியாக இக்கழகங்கள் மூலம்தான் கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இளைஞர்க ளுக்கு நிதியுதவி செய்து, தொழிற் சாலைகளை தொடங்குவதாக கூறும் தமிழக அரசு, உள்ளூர் அளவில் நிதி ஆதாரத்தின் அடித் தளமாக விளங்கும் தொழில் முதலீட்டுக் கழகத்தை மூடிவிட்டு, எப்படி தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்?.
வேறு மாவட்டங்களுக்கு அலைந்து, திரிந்து நிதி ஆதா ரத்தைப் பெற்று தொழில் செய்வ தெல்லாம் சாத்தியமற்றது. புதுக் கோட்டை கிளை மூடலின் மூலம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். எனவே, தொழில் முதலீட்டுக் கழகத்தின் புதுக்கோட்டை கிளையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இதேபோன்று, கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, தற் போது மூடப்பட்டுள்ளதால் இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கோரிக்கை மனு வாயிலாக கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இதுகுறித்து எனக்கு தகவல் வரவில்லை. விசாரித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT