Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

வாக்கு எண்ணும் மையத்தில் காலை 6 மணி முதலே குவிந்தனர் - நீண்ட வரிசையில் நின்ற வேட்பாளர்கள், முகவர்கள் :

வாக்கு எண்ணும் மையத்தில் அசதி காரணமாக அமர்ந்த நிலையிலேயே உறங்கும் அலுவலர்கள்.

கள்ளக்குறிச்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 9 ஒன்றியங்களிலும் நடைபெற்றது.

திருக்கோவிலூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருக்கோவிலூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அதிகாலையிலேயே அலுவலர்கள் உள்ளே சென்றுவிட, 6 மணிக்குப் பின் வேட்பாளர்களும், முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பும் பணி தொடங்கியது.

வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளே நுழையும் அனுமதி சீட்டுடன் வந்த போதிலும், அவற்றை பரிசோதித்தும், முகவர்களை பரிசோதிக்கவும் நேரமானதால், வாக்கு எண்ணும் மையத்தில் செல்வதற்கான வரிசை நீண்டது. சுமார் 200 மீட்டர் தூரம் முகவர்கள் வரிசையில் நின்றிருந்ததைக் காண முடிந்தது.

அசதியால் தூங்கிய அலுவலர்கள்

வாக்கு எண்ணிக்கை தொடங்கி னாலும், ஒவ்வொரு சுற்றுக்குமான இடைவெளி அதிகரித்ததால் வாக்கு எண்ணும் அலுவலர்கள் அசதியால் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.

“நேற்று (நேற்று முன்தினம்) இரவே இங்கு வந்துவிட்டோம், இரவு தூக்கமில்லை. காலையிலேயே பணி தொடங்கும் எனக் கூறிவிட்டனர். வேறு வழியில்லை மிகவும் அசதியாக இருக்கிறது. கூடுதல் அலுவலர்களை நியமித்தால் ஒருவருக்கொருவர் மாறிமாறி பணி செய்யலாம்” என்று தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x