Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 19 மையங்களில் - இன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை :

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ரோஸ்மேரி கல்லூரியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். படம்: மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தென்காசி

திருநெல்வேலி , தென்காசி மாவட்டங்களில்19 மையங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி , நாங்குநேரி, களக்காடு,ராதாபுரம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

முதற்கட்ட தேர்தலில் 1,113 பதவியிடங்களுக்கு 211 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு 3,006 பேர் போட்டியிட்டனர். 2-ம் கட்ட தேர்தலில் 956 பதவியிடங்களுக்கு 173 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

மீதமுள்ள இடங்களுக்கு 2,516 பேர் போட்டியிட்டனர். முதற்கட்ட தேர்தலில் 70.36 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 69.34 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.

வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்தபாதுகாப்புடன் 9 வாக்கு எண்ணும் மையங்களில்வைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒன்றியம் வாரியாக வாக்கு எண்ணும் மையங்கள் விவரம்: அம்பாசமுத்திரம்- அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி, இருதயகுளம், விக்கிரமசிங்கபுரம். சேரன்மகாதேவி- பெரியார் அரசுமேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி. மானூர்- ராணிஅண்ணா அரசு மகளிர் கல்லூரி, காந்திநகர்,பழைய பேட்டை. பாளையங்கோட்டை- ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கந்தான்பாறை, முன்னீர்பள்ளம். பாப்பாக்குடி- இடைகால்மெரிட் தொழில்நுட்ப க்கல்லூரி.நாங்குநேரி- ரெக்ட் தொழில் நுட்பக் கல்லூரி, தெற்கு விஜயநாரயணம், களக்காடு-திருக்குறுங்குடி டிவிஎஸ்அரசு மேல்நிலைப்பள்ளி. ராதாபுரம்-தெற்குகள்ளிகுளம் தட்சணமாற நாடார் கலை மற்றும் அறிவியல்கல்லூரி. வள்ளியூர்- எஸ்.ஏ. ராஜா கலைக் கல்லூரி, அடங்கார்குளம் அழகநேரி.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குச்சீட்டு பிரித்தல் மற்றும் எண்ணுதலுக்காக மொத்தம் 675 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 2,917 பேர் ஈடுபடுகிறார்கள். வாக்குஎண்ணிக்கையை முன்னிட்டு 9 மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் ஜெனரேட்டர், குடிநீர் வசதிகளும்செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடையம், கீழப்பாவூர்,ஆலங்குளம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர்,கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில்,செங்கோட்டை, தென்காசி ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 10 ஒன்றியங்களிலும் மொத்தம் 7,52,378 வாக்காளர்கள் உள்ள நிலையில் 5,54,533 பேர் வாக்களித்துள்ளனர். இது 73.70 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒன்றியம் வாரியம் வாக்கு எண்ணும் மையங்கள் விவரம்: ஆலங்குளம்- நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலைக்கல்லூரி, கடையம்- மேட்டூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர்- கொடிக்குறிச்சி ராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி, கீழப்பாவூர்- அத்தியூத்து சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, குருவி குளம்- அய்யனேரி உண்ணா மலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேலநீலி தநல்லூர்- வீரசிகா மணி விவேகா னந்தா சில்வர்ஜூப்ளி மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்- புளியங்குடி எஸ்விசி வீராசாமிசெட்டியார் பொறியியல் கல்லூரி, செங்கோட்டை- செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேந்நிலைப் பள்ளி, தென்காசி- குற்றாலம்  பராசக்தி மகளிர் கல்லூரி, வாசுதேவநல்லூர் ஒன்றியம்- சுப்பிரமணியபுரம் வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

மொத்தம் 907 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் 2,871 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். ஊராட்சிகள் வாரியாக வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டு, ஊராட்சித் தலைவர், ஊராட்சிவார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்பதவிக்கான வாக்குச்சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அவை தனித்தனி அறைகளில் எண்ணப்படுகின்றன. வெற்றி பெற்றவர்கள் விவரம் பிற்பகலில் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x