Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.மோகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வசதிகள், காவல்துறை பாதுகாப்பு வசதிகள்,வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட் டுள்ள பாதுகாப்பு அறை, தடுப்பு கட்டை வசதிகள், அடிப்படை வசதிகள் போன்றவை முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதை பார்வை யிட்டார்.
மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருகை புரிபவர்கள் கட்டாயம் வருகைப் பதிவேட் டில் கையொப்பமிடுவதை உறுதி செய்திட வேண்டும். கண்காணிப்பு கேமரா வாயிலாக வாக்கு எண்ணும் மையம் முழுவதையும் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். கண்கா ணிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்திட வேண்டும். கண் காணிப்பு கேமரா வாயிலாக பதி வாகும் அனைத்து பதிவுகளையும் பாதுகாப்பான முறையில் பாதுகாத்து வைத்திட வேண்டும்.
பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும்காவல்துறையினர் எக்காரணத் தினை கொண்டும் வெளிநபர்கள் உள்ளே வராதவாறு விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருகை புரியும் முகவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் அடையாள அட்டையினை தவறாமல் சரிபார்த்த பின்னரே உள்ளேசெல்ல அனுமதிக்க வேண்டும். காவல்துறையினர் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர் கள் மற்றும் காவல்துறையினருக்கு தேவையான உணவு, குடிநீர், சிற்றுண்டி உணவுகள் போன்றவை உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT