Published : 11 Oct 2021 03:14 AM
Last Updated : 11 Oct 2021 03:14 AM

திருச்சி மாநகராட்சியில் சாலைகளை சுத்தம் செய்ய, திடக்கழிவுகளை வாங்க - ரூ.3.93 கோடியில் நவீன, மின்கல வாகனங்கள் : அமைச்சர் கே.என்.நேரு இயக்கி வைத்தார்

பணியின்போது உயிரிழந்த அங்கன்வாடி ஊழியரின் வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார் அமைச்சர் கே.என்.நேரு. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் ரூ.1.73 கோடியில் சாலைகளை சுத்தம் செய்யும் 2 நவீன வாகனங்கள் மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்குவதற்காக ரூ.2.20 கோடியில் 100 மின்கல வாகனங் கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் பயன்பாட்டை நகராட்சி நிர்வாகத் துறை அமைச் சர் கே.என்.நேரு, தென்னூர் உழவர் சந்தை அருகே நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அப்போது, அமைச்சர் கே.என்.நேரு பேசியது:

சாலை சுத்தம் செய்யும் நவீன வாகனத்தால் மிக விரைவாக பணிகளை மேற்கொள்ள முடி யும். பிரதான போக்குவரத்து சாலைகளில் உள்ள மண் துகள்களை அகற்றுவதன் மூலம் காற்றில் மண் துகள்கள் கலந்து மாசுபடாமல் காற்றின் தரம் மேன்மை அடையும். மின்கல வாகனங்கள் 80 கி.மீ முதல் 100 கி.மீ வரை இயங்கும் திறன் வாய்ந்தவை. சிறிய அளவிலான இந்த மின்கல வாகனங்கள் மூலம் மாநகரப் பகுதியில் உள்ள குறுகிய தெருக்கள் மற்றும் சந்துகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று திடக்கழிவுகளை இலகுவாக வாங்க முடியும். மின்கல சக்தி மூலம் இயக்கப்படுவதால் காற்று மாசுபடுவது தவிர்க்கப்படும் என்றார்.

ஆட்சியர் சு.சிவராசு தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில், சட்டப்பேரவை உறுப்பினர் கள் எம்.பழனியாண்டி, ந.தியாக ராஜன், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், உதவி ஆணையர் செல்வபாலாஜி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலு வலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார். மேலும், பணியின்போது உயிரிழந்த அங் கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் நேரு வழங்கினார்.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலில் தோல்வி ஏற்படப்போகிறது என்பதற்காக, முறைகேடு நடைபெற்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜல் ஜீவன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், ஏற்கெனவே இருந்ததுபோல, மத்திய அரசு தனது பங்களிப்பாக 75 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுதொடர்பாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்ட ஜல் ஜீவன் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரது உத்தரவின்படி, நீரியல் வல்லுநரால் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசின் நிதி நிலைக்கேற்ப முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x