Published : 10 Oct 2021 03:19 AM
Last Updated : 10 Oct 2021 03:19 AM

ரங்கம் கோயிலில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு :

திருச்சி

ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருவறையை அடுத்துள்ள 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து, மூலவர் ரங்கநாதரை வழிபடுவர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றபோது, 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வருவதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்தது. அதன்பின் இதுவரை மீண்டும் அவ்வழியாக பக்தர்களை அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் நேற்று ரங்கம் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது கோயில் 2-ம் பிரகாரத்தில் பக்தர்களை அனுமதிக்கும் விதம் குறித்தும் கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வின்போது கோயில் இணை ஆணையர் (பொ) கல்யாணி உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x