Published : 10 Oct 2021 03:19 AM
Last Updated : 10 Oct 2021 03:19 AM
அணைக்கட்டு அடுத்த ஆயிரங் குளம் கிராம வாக்குச்சாவடி அருகே முன் விரோத தராறில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அணை கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆயிரங் குளம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் நேற்று பரபரப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று மாலை 4 மணியளவில் வாக்குச்சாவடிக்கு அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வெங்கடேசன் (35) நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் சென்ற உறவினரான கார் ஓட்டுநர் கண்ணபிரான் (28) என்பவர், வெங்கடேசனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனை, கண்ணபிரான் வயிற்றில் குத்திவிட்டு தப்பினார்.
இதில், படுகாயம் அடைந்த வெங்கடேசன் அந்த இடத் திலேயே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் வெங்கடேசனை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித் தனர்.
இந்த தகவலறிந்த காவல் துறையினர் ஆயிரங்குளம் கிராமத் துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியை பலப்படுத்தினர். இந்த கத்திக்குத்து தொடர்பாக அணைக்கட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமார் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் வெங்கடேசன், கண்ணபிரான் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்திவிட்டு தப்பிய கண்ணபிரானை தேடி வரு கிறோம். வெங்கடேசனின் வயிற்றுப் பகுதியில் சுமார் 3 செ.மீ ஆழத்துக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. இதில், முக்கிய உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார். உயிருக்கும் ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து சம்பவத்துக்கு குடும்ப பிரச்சினை என்று கூறுகிறார்கள். அதுகுறித்து முழுமை யாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT