Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM
மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
நெல்லை-பிலாஸ்பூர், மதுரை-பிகானீர், மதுரை வழியாக இயக்கப்படும் ராமேசுவரம்-ஓகா, மதுரை, திண்டுக்கல் மற்றும் கொங்கன் ரயில்வே வழியாக இயக்கப்படும் நெல்லை-தாதர் சிறப்பு ரயில்கள் நவம்பர் முதல் வாரம் வரை இயக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருநெல்வேலி-பிலாஸ்பூர் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 30-ம் தேதி வரையும், பிலாஸ்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 1-ம் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. அதேபோல ராமேசுவரம்-ஓகா சிறப்பு ரயில் சேவை ஜனவரி 28 வரையும், ஓகா-ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 1 வரையும் நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளன. மேலும் மதுரை-பிகானீர் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 27 வரையும், பிகானீர்-மதுரை சிறப்பு ரயில் சேவை ஜனவரி 30 வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி-தாதர் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 26-ம் தேதி வரையும், தாதர்- திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை ஜனவரி 27-ம் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT