Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM

ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் நீதிமன்றம் கெடு - காவல் ஆய்வாளரின் கணவர் ஆஜர் :

மதுரை

இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லர் அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி வசந்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், வசந்தியின் கணவர், விசாரணைக்காக ஆஜராகவில்லை.

மனுதாரரும் விசாரணைக்கு ஆஜரா கவில்லை. கணவரின் செல்போன் எண் கேட்டால் தெரியவில்லை என்று கூறியுள்ளார். 90 சதவீத கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

இதனால் அவருக்கு ஜாமீன் வழங் கக்கூடாது என்றார். மனுதாரர் தரப்பில், மனுதாரரின் கணவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதற்காக, மனு தாரருக்கு ஜாமீன் வழங்க ஆட் சேபம் தெரிவிப்பது சரியல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் கணவர் ஒருமணி நேரத்தில் விசா ரணை அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும். விசாரணை அதிகாரி அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கினால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறி விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.

நீதிபதியின் உத்தரவையடுத்து வசந் தியின் கணவர் நேற்று விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x