Published : 06 Oct 2021 03:12 AM
Last Updated : 06 Oct 2021 03:12 AM

திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை : விருதுநகரில் 9-ம் தேதி சிறப்பு முகாம்

விருதுநகர்

திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக அக்.9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்காக விருதுநகர் மாவட்டத்தில் அக்.9 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் திருநங்கைகள் புகைப்படம், ஆதார் அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை, குடும்ப உறுப்பினர்களுடன் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் இருக்கும் பட்சத்தில் மின்னணு குடும்ப அட்டை எண் மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் அளித்து புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x