Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM
ராமநாதபுரத்தில் அரிய வகை மரநாய் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் புதிய போலீஸ் சோதனைச்சாவடி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று காலை விலங்கினம் ஒன்று வாகனம் மோதி இறந்து கிடந்தது.
தகவல் அறிந்த ராமநாதபுரம் வனவர் சடையாண்டி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்ததில், அது காடுகளில் வாழும் அரியவகை மரநாய் எனவும், 2 அடி நீளமுள்ள பெண் மரநாய் எனவும் தெரிய வந்தது.
அடர்ந்த காடுகளில் மரங்களில் மறைந்து வாழும் இந்த விலங்கினம் நள்ளிரவு, அதிகாலையில் இரை தேடி வரும். பெரும்பாலும் மனிதர்கள் கண்ணில் படாது வாழும். அதிவேகமாக பாய்ந்து செல்வதால் இதை எளிதில் பார்க்க முடியாது. சிறு விலங்குகளை விரும்பி உண்ணும் என உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT