Published : 06 Oct 2021 03:14 AM
Last Updated : 06 Oct 2021 03:14 AM

பாளை ஒன்றிய வாக்குச்சாவடிகளுக்கு - போலீஸ் பாதுகாப்பு கேட்ட கோரிக்கை நிராகரிப்பு :

மதுரை

பாளையங்கோட்டை வடக்கு அரியகுளத்தைச் சேர்ந்த நாகமணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: உள்ளாட்சித் தேர்தலில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டுஉறுப்பினர் பதவிக்கு நான் உட்பட 8 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தோம். திமுக சார்பில் போட்டியிடும் கண்ணன் அளித்த நிர்பந்தத்தின் பேரில் 6 பேர் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றனர்.

கண்ணனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால், பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் உள்ளேன். போலீஸ் பாதுகாப்புக்கேட்டு மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே. பிரச்சாரம் செய்ய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோ வன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடு கையில், மனுதாரருக்கு செப். 26-ம் தேதியே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

மனுதாரர் தரப்பில், பாளை. ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டு பதற்றம் நிறைந்த பகுதியாகும். இதனால் வாக்குச் சாவடிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதையேற்க மறுத்து மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x