Published : 03 Oct 2021 03:12 AM
Last Updated : 03 Oct 2021 03:12 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பதிவை கண்காணிக்க 134 நுண்பார்வையாளர்கள் நியமனம் :

கள்ளக்குறிச்சியில் நேற்று அதிமுக வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் கூட்டத்திற்கு சரக்கு வாகனங்களில் வந்த வாக்காளர்கள்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் கே.விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி யருமான பி.என்.தர் முன் னிலை வகித்தார். இதில் நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தேர்தல் பொது பார் வையாளர்கள் தெரிவித்ததாவது:

இரு கட்டங்களாக நடை பெறும் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேர்தல் நாளான 6, 9 ஆகிய தேதிகளில் தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குப்பதிவு நடைபெறுவதை கண்காணிக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், இந்திய ஆயில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இந்திய அஞ்சல் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் உட்பட 134 அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் உட்பட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்வார்கள்.

மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள நுண்பார்வையாளர்கள் மேற் கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், வாக்குப்பெட்டிகளை தேர்தலுக்கு தயார்நிலை படுத்துதல் குறித்தும், தேர்தல் பார்வையாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிக்கை கள் குறித்தும் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது என்றார்.

தேர்தல் வாக்குப்பதிவை கண் காணிக்க நுண்பார்வையாளர்கள், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படை, தேர்தல் பார்வையாளர்கள் எனபல்வேறு கண்காணிப்புக் குழுக் களை ஏற்படுத்தி அவர்கள் தேர்தல் நடைபெறும் மாவட்டத்தில் சுற்றிச் சுற்றி வந்தபோதிலும், அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் உள்ளனர்.

இதை, கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் பறக்கும் படையினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x