Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM

விழுப்புரத்தில் - மதுவிலக்கு வழக்குகளில் சிக்கிய 46 வாகனங்கள் ஏலம் :

வளவனூர் காவல் நிலையத்தில் உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கரவாகனங்கள்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 46 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட உரிமை கோராத வாகனங்கள் மற்றும் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பொது ஏலம்விட்டு அரசு கணக்கில் சேர்த்திட டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

ரூ 10.18 லட்சத்திற்கு ஏலம்

அந்த வகையில் விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் எஸ்பி நாதா மேற்பார்வையில் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 46 வாகனங்கள் ரூ. 10.18 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,500 இருசக்கர வாகனங் கள் வரும் 10-ம் தேதிக்கு பிறகு, அதாவது உள் ளாட்சித் தேர்தலுக்கு பிறகு ஏலம் விடுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x