Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

9 ஆண்டுகால போராட்டத்துக்குப்பின் மாணவருக்கு எம்.பி.ஏ. சான்றிதழ் : நிரந்தர மக்கள் நீதிமன்றத்தால் பிரச்சினைக்கு தீர்வு

விழுப்புரம் மாணவர் விஜயகுமாருக்கு எம்.பி.ஏ. படிப்புக்கான சான்றிதழை வழங்குகிறார் நீதிபதி சமீனா.

திருநெல்வேலி

விழுப்புரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்கல்வி திட்டத்தின் மூலம் 2010-2012-ல் எம்.பி.ஏ. படித்து தேர்ச்சி பெற்றார். ஆனால், இம்மாணவர் இணைந்திருந்த கல்வி மையம், இவரது விண்ணப்பத்தை பாஸ்கர் என்ற பெயரில் தவறாக அனுப்பியதால் இவருக்கு பாஸ்கர் என்ற பெயரில் சான்றிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், தனது பெயரில் எம்.பி.ஏ. சான்றிதழ் கேட்டு கடந்த 9 ஆண்டுகளாக போராடிவந்தார். மேற் கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், திருநெல்வேலி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்து விஜயகுமாருக்கு எம்பிஏ சான்றிதழ் கிடைக்க உத்தரவிட்டார். அதன்படி, அவருக்கு சான்றிதழ் கிடைத்து ள்ளது. இந்த சான்றிதழை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி சமீனா நேற்று வழங்கினார். பல்கலைக்கழக வழக்கறிஞர் பிரபாகர், உதவி பதிவாளர் ராஜேந்திரன், முதுநிலை கண்காணிப்பாளர் விமலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து, நீதிபதி சமீனா கூறியதாவது:

சாலை, விமானம் மற்றும் நீர்வழி பயணிகள், சரக்கு போக்குவரத்து, அஞ்சல், தந்தி, தொலைபேசி சேவை, குடிநீர் வழங்கல், மின்சாரத்துறை, துப்புரவு பணிகள், மருத்துவத்துறை, மருத்துவமனை, காப்பீட்டு சேவைகள், வீடு, வீட்டுமனை, ரியல் எஸ்டேட், கல்வி, கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சேவை குறைபாடுகள் தொடர்பான வழக்குகளை, நீதிமன்றம் செல்லாமலேயே நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணலாம். என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x