Published : 30 Sep 2021 07:46 AM
Last Updated : 30 Sep 2021 07:46 AM
நாமக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 684 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 700 இடங்களில் நடந்தது. இதன்படி 12-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட சிறப்பு முகாமில் 85 ஆயிரத்து 375 பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 31 ஆயிரத்து 448 பேருக்கும், 26-ம் தேதி நடைபெற்ற 3-ம் கட்ட முகாமில் 59,753 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டன.
இதன்படி மூன்று கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 576 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வழக்கமான முகாம் மூலம் 8 லட்சத்து 66 ஆயிரத்து 864 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், 60 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தவிர, 2 லட்சத்து 63 ஆயிரத்து 318 பேர் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT