Published : 30 Sep 2021 07:46 AM
Last Updated : 30 Sep 2021 07:46 AM
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இல்லாத கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி நாளான அக்.2-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உட்பட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கிராமத்துக்கு தேவையான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செய்வதற்கு கருத்துகளைக் கூறலாம் என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதேபோல, கரூர் மாவட்டத்திலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள ஊராட்சிகள் நீங்கலாக பிற ஊராட்சிகளில் அக்.2-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT