Published : 30 Sep 2021 07:47 AM
Last Updated : 30 Sep 2021 07:47 AM
வேலூரில் காவல் துறை சார்பில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் எடுக்க வந்தவர்கள் பெரிய அளவில் ஒன்று திரண்டதால் கரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதனால், நோய் தொற்று அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொது ஏலம் விடும் நிகழ்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது.
வாகனங்களை ஏலம் எடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேதாஜி விளை யாட்டு மைதானம் முன்பு நேற்று காலை முதல் குவிய தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல அளவுக்கு அதிகமான கூட்டம் திரண்டது.
ஏலம் எடுக்க வந்தவர்களின் இரு சக்கர வாகனங்கள் அங் குள்ள சாலைகளில் நிறுத்தப்பட்ட தால், நேதாஜி மைதானம் வழியாக கோட்டை சுற்றுச் சாலைக்கு செல்லும் வழியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட வாக னங்களை ஏலம் எடுக்க வந்த பொதுமக்கள் ரூ.100 நுழைவு கட்டணம் செலுத்திய பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நுழைவு கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுவதற்காக இளை ஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும், நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே சமூக இடைவெளி இல்லாமல் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகமாக திரண்டதால் கரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. ஏலம் எடுக்க வந்த இளைஞர்களின் பலர் முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்ததை பார்க்க முடிந்தது.
நேற்று நடைபெற்ற பொது ஏலத்தில் 3 லாரிகள், 20 கார்கள், 7 ஆட்டோக்கள், 486 இரு சக்கர வாகனங்கள், 13 மிதிவண்டிகள் உட்பட 529 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
வாகன மதிப்பீட்டாளர்கள் மூலம் அனைத்து வாகனங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் ஆரம்ப விலையில் இருந்து ஏலத்தொகை கோரப்பட்டது.
ஏலத்தில் இரு சக்கர வாகனங் களை போட்டி போட்டுக்கொண்டு இளைஞர்கள் ஏலம் எடுத்தனர். ஏலம் எடுத்த வாகனங்களுக்கு கூடுதலாக 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது.
ஏலம் எடுத்தவர்கள் வாகனங் களுக்கான தொகை மற்றும் ஜிஎஸ்டி வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டது. ஏலத்துக்கான தொகையை செலுத்திய 3 நாட்களுக்குள் வாகனங்கள் ஏலம் எடுத்தவர்களிடம் வழங்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
கரோனா விதிமுறைகளை மீறி வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டதால் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT