Published : 28 Sep 2021 03:19 AM
Last Updated : 28 Sep 2021 03:19 AM
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இனசுழற்சி இடங்களுக்கும், அரசு அளித்துள்ள கூடுதல் இடங்களுக்கும் இறுதிக்கட்டக் கலந்தாய்வு வரும் 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்களும் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
வரும் 29-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தொழில்துறை வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் மற்றும் பிசிஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் பிளஸ் 2 அறிவியல் பாடத்தில் பகுதி 3-ல் 250 முதல் 400 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். வரும் 30-ம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு பி.காம்,பிபிஏ மற்றும் பிஏ வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இதில் பிளஸ் 2 கலைப் பாடத்தில் பகுதி 3-ல் 220 முதல் 400 வரையிலான கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். அக்டோபர் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பிஎஸ்சி உளவியல், விஸ்காம் மற்றும் பிஏ பொது நிர்வாகம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இவற்றில் பி.ஏ. தமிழ் பாடத்திற்கான கட்ஆஃப் 60 மதிப்பெண்கள். பி.ஏ. ஆங்கிலப் பாட்த்திற்கான கட்ஆஃப் 50 மதிப்பெண்கள். மற்ற பாடங்களுக்கு பிளஸ் 2 அறிவியல் மற்றும் கலைப் பாடத்தில் பகுதி 3-ல் 220 முதல் 400 வரையிலான கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.
முதுநிலை படிப்புகளுக்கு கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 6-7ம் தேதிகளில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT