Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி :

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சியை ஆய்வு செய்கிறார் மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தலில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் தெரிவித்தது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணி களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இரு கட்டங்களாக 1,889 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கவுள்ளதால் வாக்குச்சீட்டுகளை கையாள்வது குறித்து விளக்கப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்துவதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

இம்மையங்களில் வாக்கு பெட்டிகள் இருப்பறை, வாக்குச் சீட்டுகள் பிரித்தல் மற்றும் வாக்கு சீட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுள்ளது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பதற்றமான வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கிட தெரிவிக்கப்பட்டடுள்ளது என்றார்.

ஆய்வின் போது, உதவித் திட்ட அலுவலர் ரத்தினமாலா, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x