Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM
திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. இதை கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியில் பல விதமான கொலு பொம்மைகள், கொலு செட்கள், கொண்டபள்ளி பொம்மைகள், மரபாச்சி, காகிதக் கூழ், மண், பளிங்குகல், மாக்கல், நவரத்தின கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொம்மைகள் ரூ.50 முதல் ரூ.45 ஆயிரம் வரை இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக மலைக்கோட்டை, தஞ்சாவூர் பெரிய கோயில், பழநி மலை, திருத்தணி, தங்கத்தேர், அம்மன் தேர், முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன், விநாயகர் திருமணம், பெண் பார்த்தல், பூணூல் செட், காமதேனு லட்சுமி, சிங்கேரி சாரதாம்பாள், உடுப்பி கிருஷ்ணர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான செட் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி அக்.20-ம் தேதி வரை(ஞாயிறு உட்பட) நடைபெறவுள்ளது. கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில், பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ஆர்.கங்காதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT