Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

நெல்லை மாவட்டத்தில் - 9 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை :

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங் களில் தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நாளை வெளியாகிறது. வேட்பாளர்களுக்கான சின்னங் களும் அன்றைய தினமே ஒதுக்கப் படுகிறது. 2 கட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவாகும் வாக்குகள், 9 மையங்களில் எண்ணப்படவுள்ளன. அதன்படி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் கள்ளிகுளம் தட்சணமாறநாடார் சங்க கல்லூரியிலும், மானூருக்கு- பழையபேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியிலும், சேரன்மகா தேவிக்கு - பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பாளையங்கோட்டைக்கு - பொன்னாக்குடி ரோஸ்மேரி கல்லூரியிலும், நாங்குநேரிக்கு - ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், களக்காடுக்கு - திருக்குறுங்குடி தூய சவேரியார் பள்ளியிலும், அம்பா சமுத்திரத்துக்கு - அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பாப்பாக்குடிக்கு - மெரிட் கல்லூரியிலும், வள்ளியூருக்கு - எஸ்.ஏ. ராஜா கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், 2-வதாக ஊராட்சி தலைவர், 3-வதாக ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடு கள் குறித்து, திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஜெயகாந் தன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக பாளையங் கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x