Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM
திருச்சி மாவட்டத்தில் 24 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கு நடத்தப்படவுள்ள தற்செயல் தேர்தலில் போட்டியிட மொத்தம் 74 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் 19 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 ஊராட்சித் தலைவர்கள் என மொத்தம் 24 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் செப்.15-ம் தேதி தொடங்கி, நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஒன்றியக் கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 27 மனுக்களும், 2 ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு 8 வேட்புமனுக்களும், 19 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 39 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் மீது இன்று (செப்.23) ஆய்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து, செப்.25-ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT