Published : 22 Sep 2021 03:08 AM
Last Updated : 22 Sep 2021 03:08 AM

‘நீட்’ தேர்வு ரத்து தீர்மானம் சட்டரீதியாக வெற்றிபெற உழைக்கிறோம் : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை, வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அருகில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

தமிழகத்தில் ‘நீட்' தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்ட ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்த பட்டியலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று காலை வெளியிட்டார்.

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டியலை வெளி யிட்டு செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறும்போது, ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 13 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 3, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 1 என மொத்தம் 6 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் திமுக போட்டி யிடுகிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பெருவாரியான இடங்களில் வெற்றிகளை பெற்றோம். இப்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மாவட்டத்தில் தொடர் மழையால் பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மோர்தானா அணையும் நிரம்பியுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் மட்டுமே முழுமையான அளவு ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியும். எனவே, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப் படும்.

தமிழகத்தில் ‘நீட்' தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்ட ரீதியாக வெற்றிபெற வேண் டும் என்று நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

அப்போது, வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, வேலூர் மாநகர செயலாளரும் வேலூர் எம்எல்ஏவுமான கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x