Published : 22 Sep 2021 03:08 AM
Last Updated : 22 Sep 2021 03:08 AM

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக்கில் - ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி :

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வரும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்கள்.

வேலூர்

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுமம் சார்பில், ஆசிரியர் மேம்பாட்டு திட் டத்தின் கீழ் ‘பேர்லல் ரோபாட் பார் இன்டஸ்ட்ரீஸ்’ என்ற தலைப்பில் ஒரு வார பயிற்சி வகுப்புகள் கடந்த 20-ம் தேதி தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கல்லூரி தலைவர் பால கிருஷ்ணா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் தண்டபாணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மின்னணுவியல் துறைத் தலைவர் குழந்தைவேல் சிறப்புரை யாற்றினார். இதில், பேராசிரியர்கள் அமுதா, ராஜாராம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தொழிற்சாலை 4.0 என்ற தொலைநோக்கு தொழில் நுட்பத்தில் ரோபாட்களின் ஆதிக்கம், அவற்றுக்காக மாணவர்களை தயார்படுத்துதல், வேலைவாய்ப்பு, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x