Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க மறுப்பது, தனியார் மயமாக்குதல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்டவைகளை கண்டித்து கிருஷ்ணகிரியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான செங்குட்டுவன், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.இதில், முன்னாள் எம்பி-யும், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினருமான வெற்றிச்செல்வன், நிர்வாகிகள் அஸ்லாம், கடலரசுமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி காந்தி நகர் பகுதியில் பர்கூர் எம்எல்ஏ-வும், மாநில விவசாய அணி துணை தலைவருமான மதியழகன் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். காவேரிப்பட்டணத்தில் நகர செயலாளர் ஜேகேஎஸ் பாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கேவிஎஸ் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
இதே கோரிக்கையை வலி யுறுத்தி, ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஓசூரில் முன்னாள் எம்எல்ஏ சத்யா மற்றும் கூட்டணி கட்சி யினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இதேபோல ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மூத்ததலைவர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தருமபுரியில்...
தருமபுரி அடுத்த தடங்கம் கிராமத்தில் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார்.மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் தலைமையில் பென்னாகரம் அடுத்த குள்ளாத்திரம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதுபோல, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம், மொரப்பூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT